கள்ளக்காதலிக்கு 2 பேர் அடிதடி... சராமாரியாக குத்தியதில் ஒருவர் பலி!

 
நந்தினி

 தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்பாளையத்தில்    வசித்து வருபவர் 31 வயதான நந்தினி. நந்தினியின் கணவர் இறந்துவிட்ட நிலையில் அவர்  மட்டும் தனியாக வசித்து வந்தார். திடீரென நந்தினியின் வீட்டில் ஒரு இளைஞரின்  அலறல் சத்தம் கேட்டது.  இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். இளைஞர் ஒருவர் கண்ணாடி பாட்டிலால் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு  சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு  தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக  கொண்டு செல்லப்பட்டார்.

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

அங்கு சிகிச்சை பலனின்றி   இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அதேபகுதியில் பதுங்கி இருந்த நந்தினி மற்றும் அவருடன் இருந்த பிரபாகரனையும்  போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில்  திடுக்கிடும் தகவல்கள்  வெளியாகியுள்ளன.  இது குறித்து போலீசார் " நந்தினி வீட்டில் ரத்த வெள்ளத்தில் மீட்கபட்ட இளைஞர் 23 வயது சதீஷ்.  இளம்பெண்ணின் கணவர் இறந்த நிலையில் கூலித்தொழிலாளியான சதீசுக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.  இந்தப்பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி  இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

ஆம்புலன்ஸ்

நந்தினிக்கு இதற்கு முன்பே ஆட்டோ டிரைவர் பிரபாகரனுடன் பழக்கம் இருந்தது. சம்பவம் நடந்த அன்று நந்தினியும் பிரபாகரனும் தனிமையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த சதீஷை நந்தினியும், பிரபாகரனும் சேர்ந்து தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சதீஷ் உயிருக்கு போராடினார்.   நந்தினி, பிரபாகரன் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். கொலை நடந்த வீட்டில் கஞ்சா இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூலித் தொழிலாளி குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web