திருச்சியில் 2 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு? 3 மணி நேரம் போலீசார் தீவிர சோதனை!

 
திருச்சி ஐஎஸ்ஐ எஸ் போலீசார்

ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன்  தொடர்பில் உள்ளதாக சந்தேகத்தில் இரண்டு பேரிடம் திருச்சி மாவட்ட காவல் துறையினர்  3 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனைக்கு பின்னர், அவர்களிடம் இருந்த ஹார்டுடிஸ்க் மற்றும் 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி இனாம்குளத்தூரில் சாகுல் அமீது மற்றும் ஷர்புதீன் என்ற இருவர் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐ எஸ் ஐ எஸ் முகநூல் பக்கத்தை கடந்த 2019 ம் ஆண்டு இவர்கள் லைக் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் இவர்கள் வீட்டில் திடீரென சோதனை நடத்தியது. 

திருச்சி
இந்நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்புடன் ஏற்கெனவே தொடர்பில் இருந்ததாக  கூறப்படும் இனாம்குளத்தூரைச் சேர்ந்த சாகுல் அமீது மற்றும் ஷர்புதீன் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் தமிழக காவல்துறை இயக்குநர் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்ட ஜீயபுரம் டிஎஸ்பி பாரதிதாசன், ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வீரமணி, சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார், ஜீயபுரம் காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் தலைமையில் 30 போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

கோவை கார் வெடி

வெடிகுண்டு  நிபுணர்கள் மெட்டல் டிடெக்டருடன், மோப்ப நாய் வைத்து சோதனை நடத்தினர். இனாம்குளத்தூர் காவல் நிலையத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.  மூன்று மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில் இருவரிடமிருந்து ஹார்டுடிஸ்க், 2 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web