2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து!! 2 பேர் பலி!!

 
விமானம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள வாட்சன்வில்லி நகர விமான நிலையத்தில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. செஸ்னா 340 என்னும் இரட்டை என்ஜின் விமானத்தில் இரண்டு விமானிகளும், செஸ்னா 152 என்னும் ஒற்றை என்ஜின் விமானத்தில் ஒருவரும் இருந்துள்ளனர். 

விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மூன்று பேரில், இருவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க நேரப்படி நேற்று (ஆக். 18) மாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக வாட்சன்வில்லி மாநகரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமானத்தில் இருந்தவர்களை தவிர்த்து வேறு யாருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த விபத்து குறித்து பொதுமக்களால் புகைப்படங்களும், வீடியோக்களும் பதிவிடப்படுகின்றன. 


அதில், விமான நிலையத்தில் விமானம் ஒன்று முற்றிலும் சிதைந்து கிடக்கிறது. மற்றொரு வீடியோவில், விமான நிலையத்தின் அருகாமையில் இருந்து புகைமூட்டம் காணப்படுகிறது. விமானநிலைய கட்டடம் ஒன்று சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web