+2 பொதுத்தேர்வு நிறைவு; விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.8ம் தேதி தொடக்கம்!

 
அன்பில் மகேஷ் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

விடைத்தாள்கள் திருத்தும் பணி

தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஏப்ரல் 8ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்தவுடன், மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றப்பட்டுச் சரிபார்க்கப்படும். மே 8, 2026 அன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விடைத்தாள்கள் திருத்தும் பணி

கடைசித் தேர்வு முடிந்து மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவர்கள், ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைத் தூவியும், வினாத்தாள்களை வானில் வீசியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.