தனியார் பள்ளியில் +2 மாணவன் உயிரிழப்பு - நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை!

 
மாணவன்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் 17 வயது மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த பிரின்ஸ் சோனி (17) என்ற மாணவன், புதன்கிழமை காலை பள்ளியில் வழக்கம் போல உணவு சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அம்மாணவன் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

மாணவன் மயங்கி விழுந்த உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், பள்ளி நிர்வாகத்தினர் அவசியமான முதலுதவி செய்யாமல் பெற்றோரை மட்டுமே தொடர்புகொண்டு வரவழைத்துள்ளனர்.

பெற்றோர்கள் விரைந்து வந்து மாணவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அவசரக் காலத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியமாகச் செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பள்ளி நிர்வாகத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.