தென்காசியில் கிராமத்துக்குள் புகுந்த 2 காட்டு யானைகள் - அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - பள்ளிக்கு விடுமுறை!

 
யானை தென்காசி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள நெடுவயல் கிராமத்திற்குள் மேற்குத் தொடர்ச்சி மலைப் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

நேற்று காலையில் நெடுவயல் கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள், அங்குள்ள குளத்தில் கும்மாளமிட்டு விட்டு, பின்னர் அருகில் இருந்த தென்னந்தோப்பிற்குள் தஞ்சமடைந்தன. யானைகள் நடமாட்டம் காரணமாக அச்சன்புதூர் - தென்காசி சாலையில் தற்காலிகமாகப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

யானை யானைகள் நீலகிரி

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மதியத்திற்குப் பிறகு விடுமுறை அறிவிக்கப்பட்டது. உயர் மின் அழுத்தக் கம்பிகளில் யானைகள் உரசிக் விபத்து ஏற்படாமல் இருக்க, அப் பகுதியில் முன்னெச்சரிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

காவல்துறையினரும் வனத்துறையினரும் அப்பகுதியில் முகாமிட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். யானைகளைப் பாதுகாப்பாக மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.