கிருஷ்ணகிரியில் சோகம்: ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 2 பெண்கள் தற்கொலை!
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கிராமத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரு பெண்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகிருஷ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்தனா (19). இவருக்குத் தனது தாய் மாமன் கந்தராசுடன் திருமணம் நடந்து ஒரு வருடமே ஆகிறது. இந்நிலையில், தனது தாய்வீட்டிற்கு வந்திருந்த அவர், எதிர்பாராதவிதமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த முனியம்மா (45) என்ற மற்றொரு பெண்ணும் தனது வீட்டின் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு தற்கொலைச் சம்பவங்கள் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
