பெற்றோர்களே உஷார்... கேரட் தொண்டையில் சிக்கி 2 வயது குழந்தை மூச்சுத்திணறி பலி!

கொருக்குப் பேட்டையில் உறவினர் வீட்டிற்கு பிரமிளா குழந்தை லித்திஷாவுடன் சென்றிருந்தார். அங்கு விளையாடிக்கொண்டு இருந்த லித்திஷா, சமைக்காத கேரட் துண்டை சாப்பிட்டார். விளையாடிக் கொண்டு இருந்த லித்திஷா கேரட், தொண்டையில் சிக்கிய நிலையில் மயங்கி விழுந்தாள். இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த லித்திஷாவின் தாய் மற்றும் உறவினர்கள் பதறியடித்து தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி செய்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். உடனடியாக குழந்தையை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் , வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனைக்கேட்டதும் பெற்றோர்கள் கதறி துடித்தனர். கேரட் தொண்டையில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை உயிரிழந்த தகவல் குறித்து அறிந்ததும், அங்கு வந்த கொருக்குப் பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சின்னஞ்சிறு குழந்தைகளை 5 வயது வரையில் மிக மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமே. அந்த வயதில் குழந்தைகள் கவனக்குறைவாக தரையில் கிடக்கும் பொருட்களை எடுத்து விழுங்கிவிடும். இதனால் பல நேரங்களில் குழந்தையின் உயிருக்கே கூட ஆபத்தாக முடிந்து விடும். என குழந்தை நல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!