அழுகையை நிறுத்த வாயைப் பொத்திய தந்தை: 2 வயது குழந்தை துடிதுடித்து பலி!

 
raamulu raamulu

 

தெலுங்கானா மாநிலம் அனுமாபுரம் கிராமத்தில் 2 வயது பெண் குழந்தை, தந்தை வாயைப் பொத்தியதால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி தம்பதியான ஸ்ரீராமுலு மற்றும் நாகமணி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்ற மனைவியை, ஸ்ரீராமுலு சமாதானம் செய்து 4 நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

ஆம்புலன்ஸ்

சம்பவத்தன்று நாகமணியின் தந்தை வீட்டிற்கு வந்ததைக் கண்ட குழந்தை நித்யஸ்ரீ, ஓடிச் சென்று தாத்தாவைக் கட்டிக்கொண்டது. இதைப் பார்த்த ஸ்ரீராமுலு, தனது மனைவி மீண்டும் குழந்தையுடன் தந்தை வீட்டிற்குச் சென்றுவிடுவார் என்று அச்சமடைந்துள்ளார். இதனால் குழந்தையை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றபோது, குழந்தை வீறிட்டு அழுதுள்ளது. குழந்தையின் அழுகையை நிறுத்த ஸ்ரீராமுலு அதன் வாயையும் மூக்கையும் சேர்த்துப் பொத்தியுள்ளார்.

குழந்தை உயிரிழப்பு

இதில் மூச்சுவிட முடியாமல் திணறிய குழந்தை நித்யஸ்ரீ அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தது. தனது செயலால் குழந்தை இறந்துவிட்டதை உணர்ந்த ஸ்ரீராமுலு, உடனடியாகக் காவல் நிலையத்தில் சரணடைந்தார். குடும்பப் பிரச்சினையில் பெற்ற தந்தையே குழந்தையைக் கொன்ற இந்த விபரீதச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.