நிலத்தகராறில் தவெக நிர்வாகி மீது தாக்குதல் - 2 இளைஞர்கள் கைது!

 
தவெக கொடி கட்சிக்கொடி பேனர்

தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரம் பகுதியில் நிலத்தகராறு காரணமாகத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியை வழிமறித்துத் தாக்கிய வழக்கில் இரண்டு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி பீட்டருக்கும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானராஜுக்கும் இடையே நிலம் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

தேவாலயம் அருகே பைக்கில் சென்ற பீட்டரை 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்துத் தாக்கியதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் புகாரைப் பெற்ற குரும்பூர் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய முத்துப்பாண்டி (21), செந்தில்ராஜன் (19) ஆகிய இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள மற்ற நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.