கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து - கார் மீது லாரி மோதி 2 இளைஞர்கள் பலி; 3 பேர் படுகாயம்!

 
விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி நேரிட்ட விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் 5 இளைஞர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரின் பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக கார் மீது பலமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், தலைகீழாகச் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கார்

இந்த விபத்தில் காரில் பயணித்த திருப்பதி மற்றும் அசோக்குமார் ஆகிய 2 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த அவர்களின் நண்பர்கள் 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துக் கந்திகுப்பம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.