பைக் மீது லாரி மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி - விழுப்புரம் புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல்!
Aug 14, 2026, 07:50 IST
விழுப்புரம் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி நிகழ்ந்த கொடூர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் புறவழிச்சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது, எதிர்பாராதவிதமாக அதிவேகமாக வந்த லாரி பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அருண் மற்றும் நரேஷ் ஆகிய இரு இளைஞர்களும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற லாரி ஓட்டுநர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
