மூன்றே நாளில் ரூ20 கோடி!! வசூலை அள்ளிக்குவித்த “யசோதா”

 
சமந்தா

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல தெலுங்கிலும் முண்ணனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா .இவரது நடிப்பில் சமீபத்தில் “யசோதா” திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அத்துடன்  விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் , படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.  

சமந்தா

இந்த படத்தில் சமந்தாவுடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உட்பட  பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கான  இசை  மணி சர்மா. யசோதா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலை குவித்து வருகிறது.

சமந்தா

இந்நிலையில், திரைப்படம்  வெளியான 3 நாட்களில்  உலகம் முழுவதும்  20 கோடிகள்  வசூல் செய்துள்ளது. இனி  வரும் நாட்களில் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வெளியான 3 நாளில் 20 கோடிகள் வசூலை குவித்துள்ளதால், சமந்தாவின் ரசிகர்கள் அவரை ‘பாக்ஸ் ஆபிஸ் குயின்’ என கொண்டாடி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web