வெளுத்து வாங்கப்போகுது... இன்று இரவு 20 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

 
பனி, மழை பனி, மழை

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு   வரை 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல இடங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை நீடிக்கும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெயில் மழை

குறிப்பாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், நீலகிரி, கோயம்புத்தூர் போன்ற மலைப் பிரதேசங்களிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். திடீர் மழையினால் சாலைகளில் வெள்ளநீர் தேங்க வாய்ப்புள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மழை

வானிலை மாற்றங்கள் குறித்து உடனுக்குடன் தகவல்களைச் சேகரித்து வரும் அதிகாரிகள், மீனவர்கள் கடலுக்குச் செல்வது குறித்தும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். மே 7-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையளவு இயல்பை விட அதிகமாகவே இருக்கும் எனத் கணிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மழையினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கத் தேவையான தயார் நிலையில் இருக்குமாறு வருவாய்த்துறை ஊழியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.