அதிர்ச்சி!! இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக் கழகங்கள்!! கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்!!

 
யூஜிசி

இந்தியாவில் 20  அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளதாக  யு.ஜி.சி.  அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.   போலி பல்கலைக்கழகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த நிறுவனங்களில் மாணவர்கள் வாங்கும் எந்த பட்டமும் செல்லுபடியாகாது எனவும் அறிவித்துள்ளது.இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.   இது குறித்து யு.ஜி.சி. செயலாளர் மணிஷ் ஜோஷி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில்   'பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக ஏராளமான நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வருகின்றன.

யூஜிசி

 இந்த  பட்டங்கள் அனைத்தும் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பிற்காக பயன்படுத்த இயலாது. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை'  என அறிவித்துள்ளது. 20 பல்கலைக்கழகங்களில்  தலைநகர் டெல்லியில் மட்டுமே 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அந்தவகையில், அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம், வர்த்தக பல்கலைக்கழகம் லிமிடெட், ஐ.நா. பல்கலைக்கழகம், தொழிற்கல்வி பல்கலைக்கழகம், ஏ.டி.ஆர். மத்திய நீதித்துறை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும்  ஆன்மிக பல்கலைக்கழகம் இவை அனைத்தும் போலியானவை.  

யூஜிசி

உத்தரபிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்கள்    கர்நாடகா, மராட்டியம், புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளம், மற்றும் கேரளா   மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை  யு.ஜி.சி. எனப்படும்  பல்கலைக்கழக மானியக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இதில் ஏற்கனவே படித்து வரும் மாணவ,மாணவிகளின் எதிர்காலம் குறித்த முடிவுகளையும் அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளையும் உடனடியாக தெரிவிக்க மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web