அலறும் வாகன ஓட்டிகள்... தமிழகம் முழுவதும் 20 புதிய சுங்கச்சாவடிகள்...?

 
சுங்கச்சாவடி

அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 

சுங்கச்சாவடி


இது தொடர்பான விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடும் படி, பெங்களூரு-சென்னை விரைவு சாலையில் ஸ்ரீபெரும்புதூர், கோவிந்தவாடி, மேல்பாடி, வசந்தபுரம் போன்ற இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைய இருக்கின்றன.

 

சுங்கச்சாவடி



அதே போல் விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில், கெங்கராம்பாளையம்(விழுப்புரம்), கொத்தட்டை(கடலூர்), ஆக்கூர் பண்டாரவாடை (மயிலாடுதுறை), விக்கிரவாண்டி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள், ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள், சித்தூர்-தச்சூர் விரைவு சாலையில் 3 சுங்கச்சாவடிகள், மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகள் என மொத்தம் 20 சுங்கச்சாவடிகளை அடுத்த 2 ஆண்டுகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web