மனைவிக்கு ரோஜா🌹... ❤️கணவருக்கு வாழைப்பழம்! 200 தம்பதிகள் நெகிழ்ச்சி !

 
தென்காசி

 

 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் ஸ்ரீமன் ராமசாமி மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பெண்களின் பெருமையை போற்றும் வகையில் ‘மனைவிக்கு மரியாதை’ மற்றும் ‘மனைவி நல வேட்பு விழா’ நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு ரோஜா மலர் கொடுத்து, தலையில் சூட்டி அன்பை வெளிப்படுத்தினர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டு, ஒருவருக்கொருவர் மாலை அணிவித்துக் கொண்டனர்.

இன்பத்திலும் துன்பத்திலும் துணையாக நிற்கும் மனைவிகளுக்கு கணவர்கள் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்தனர்.இதற்கு பதிலாக மனைவிகளும் தங்கள் கணவர்களுக்கு வாழைப்பழம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினர். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் நிகழ்ச்சியில் பேசப்பட்டது