200 கி.மீ. சூறைக்காற்று... 'அர்னாப்' அதி தீவிரப் புயல் முன்கூட்டியே கரையைக் கடக்கத் தொடங்கியது.. வடசென்னை, திருவள்ளூரில் பயங்கர கடல் சீற்றம்!

 
அர்னாப் புயல்

வங்கக்கடலில் மையம் கொண்டு தீவிரமடைந்திருந்த 'அர்னாப்' அதி தீவிரப் புயல், கணிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆந்திராவின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஏனாம் பகுதிகளுக்கு அருகில் இந்த அதி தீவிரப் புயல் தற்போது கரையைத் தொட்டுள்ளது.

ஆரம்பத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்த இந்தப் புயல், பின்னர் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே புயலின் வெளிச்சுற்று ஆந்திரப் பிரதேசத்தின் நிலப்பகுதியைத் தொட்டுவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி புயல் நகர்ந்து வருவதால், இதன் தாக்கம் ஆந்திரக் கடற்கரைப்பகுதிகளிலும் அதன் அருகிலுள்ள மாநிலங்களிலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

க்ச

புயலின் தடம் மற்றும் நகரும் திசை காரணமாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் வடசென்னை மற்றும் திருவள்ளூர் கடற்பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழும்பி வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடல்சார் நடவடிக்கைகளும், துறைமுகப் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான காலக்கட்டத்திற்குள் புயல் முழுமையாகக் கரையைக் கடந்துவிடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் அந்தச் சமயத்தில் மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 200 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ட்ஃப்சஃப்

இந்த அதி தீவிரப் புயல் காரணமாக ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகளிலும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் நிவாரணப் பணிகளிலும் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.