தலித் மணமகனின் திருமண ஊர்வலம்... 200 போலீசார் பாதுகாப்பு!

 
மணமகன்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் மாவட்டத்தில் வசித்து வரும் தலித் இளைஞர் விஜய் ரேகர். இவரது திருமணத்தில் குதிரை ஊர்வல நிகழ்ச்சி, நடைபெற்றது.  இந்த திருமண நிகழ்ச்சியில், மணமகன் குதிரையின் மீது அமர்ந்து மணமகளின் கிராமத்தை நோக்கி ஊர்வலமாக செல்லும் பாரம்பரிய 'பிந்தோலி' நிகழ்ச்சியில் ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்து தாக்குதல் நடத்துவார்கள் என சந்தேகம் எழுந்தது.  
இந்நிலையில், அதற்கு பாதுகாப்பு அளிக்கும்படி  தன்னார்வலர்களின் உதவியோடு மணமகளின் குடும்பத்தினர் அம்மாவட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

திருமணம்

இதன் பேரில் நேற்று ஜனவரி 21ம் தேதி செவ்வாய்க்கிழமை  மணமகன் விஜய் ரேகரின் குதிரை சவாரி ஊர்வலத்திற்கு பாதுகாப்பு அளிக்க மாவட்ட அதிகாரிகளினால் சுமார் 200 காவல் துறையினர் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்களது பாதுகாப்பில் மணமகளின் லவேரா கிராமத்தை நோக்கி சிறப்பாக  அந்த குதிரை ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதுகுறித்து அஜ்மர் மாவட்ட காவல் துறை அதிகாரி ” தலித் இளைஞரின் திருமண ஊர்வலத்தில் எந்தவொரு அசம்பாவித தாக்குதல் சம்பவங்களும் நடைபெறக்கூடாது என அந்த கிராம மக்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில்  கிராமவாசிகள் உறுதி அளித்ததாகவும் அவர் கூறினார்.

திருமணம்


முன்னதாக, தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களின் திருமண ஊர்வலங்களில் ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தி வந்தனர். இச்சம்பவங்களினால் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியை நாடியதாக மணமகளின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.   திருமண  ஊர்வலத்தின்போது வழக்கமாக வெடிக்கப்படும் பட்டாசுகளும் இசை கச்சேரிகளும் தவிர்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!