வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு... இனி ஹெட்போன் அணிந்தபடி வாகனம் ஓட்டினால் ரூ.2000 அபராதம்!

 
வாகன ஓட்டி

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மனிதனின் ஆறாம் விரலாய்  மொபைல் போன்கள்  மாறிவிட்டன. சோறு இல்லாமல் கூட இருந்து விடலாம்.ஆனால் மொபைல் போன் இல்லாமல் எதுவுமே நடக்காது என்பது மாதிரி ஆகிவிட்டது. இன்றைய உலகம். வீட்டில் அரிசி இல்லன்னு பொலம்பறவன் கூட ஆண்ட்ராய்டு போன் வச்சிட்டு தான் திரியறான். வீட்டிற்கு ஒரு போன் என்ற நிலை மாறி ஒருவருக்கு 2 அல்லது 3 போன்கள் என்ற நிலை மாறிவிட்டது. ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால், குறைந்தபட்சமாக 6 அல்லது 7  செல்போன்கள் வைத்துள்ளனர்.  அதிலும் என்ன நடந்தாலும் உடனே வீடியோ எடுப்பது மீம்ஸ் போடுவது என சீரழிகிறது இளைய சமுதாயம். அதிலும்  சாலைகளில் ஹெல்மெட் அணிந்தபடி, கழுத்தை சாய்த்தப்படி சாகசங்கள் செய்து கொண்டே செல்போனில் பேசியபடி பலரும் வண்டி ஓட்டி செல்கின்றனர்.

வாகன ஓட்டி

 சிலர்  கழுத்தில் ஹெட் செட் மாட்டிக் கொண்டே பேசியபடியும் செல்கின்றனர். இனி போனில் பேசியபடியே வாகனம் ஓட்டினால்   ரூ.2,000 அபராதம் செலுத்த வேண்டும் என ஆந்திர மாநில அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.  வாகனங்களில் பயணிப்பவர்கள் செல்போனில் பேசியபடியும், கழுத்தில் போன் ஹெட் செட் மாட்டி அதன் மூலம் பேசியபடியும் செல்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்   சாலையில் கவனம் இன்றி விபத்துகளில் சிக்கிவிடுகின்றனர். இதனை கட்டுப்படுத்தவே என விளக்கம் அளித்துள்ளது அம்மாநில அரசு.   இது குறித்து ஆந்திர போலீசார் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின் படி  கழுத்தில் போன் ஹெட் செட் மாட்டியபடி பேசி செல்வபவர்களால் அதிக விபத்துகள் நிகழ்வதாக தெரிவித்துள்ளனர்.  

வாகன ஓட்டி

இந்த அறிக்கை முடிவுகளை  போலீஸார் மாநில அரசிடம் சமர்பித்தனர். அதில் இயர் போன், போன் ஹெட் செட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அதிகமான அபராதம் விதிப்பதன் மூலம் அதிகரித்து வரும் விபத்துகளை குறைக்கலாம் என தெரிவித்து இருந்தனர்.இதனை பரிசீலணை செய்த   ஆந்திர  அரசு, போன் ஹெட் செட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க முடிவு செய்தது. இந்த உத்தரவு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது அதன்படி கார், பைக், ஆட்டோ, பேருந்து  என எந்த  வாகனங்களை ஓட்டி சென்றாலு  கழுத்தில் போன் ஹெட் செட், இயர் போன் மாட்டியிருந்தாலோ அல்லது, அவற்றின் மூலம் பேசியபடி சென்றாலோ  ரூ. 2000    அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web