எஸ்பிஐ வங்கியில் 2000 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!!

 
எஸ்பிஐ

 இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று  ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. இங்கு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பணியிடங்கள்  தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள எஸ்.பி.ஐ. அலுவலங்களில் தேர்வு செய்பவர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.  

பணியின் பெயர்: Probationary Officers (PO)

காலிப்பணியிடங்கள்: 2,000

ஸ்டேட் பாங்க் எஸ்.பி.ஐ. வங்கி

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்.டி/ பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: 

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.63 ஆயிரம் வரை கிடைக்கும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வேலை செய்வதற்கான Bond (ரூ.2 லட்சம்) சமர்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ‘Probationary Officers’ ஆக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதன்மை தேர்வு மற்றும் மெயின் தேர்வு ஆகியவை நடைப்றும். இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.

முதன்மை தேர்வு தமிழ்நாட்டின் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். மெயின் தேர்வு சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மட்டும் நடைபெறும்.

எஸ்பிஐ

தேர்வு கட்டணம்: 

தேர்வுக்கட்டணம்; தேர்வுக்கட்டணமாக பொதுப்பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் 750 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.09.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் 03.10.2023ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

From around the web