2024 டி 20 போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகள் பட்டியல் வெளியீடு!!

 
டி20,2024

சர்வதேச டி20  கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில்  நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ளும் நாடுகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு சூப்பர்12 சுற்றில் விளையாடின. இந்த இரு அணிகளில்  குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு செல்லும் தகுதியை பெற்றுள்ளன. நடப்பாண்டில் டி20 போட்டியில் ரசிகர்களுக்கு  பல்வேறு அதிர்ச்சிகள் காத்திருந்தன.

t20

இலங்கை அணி நமிபியாவிடம் தோல்வி, வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்திடம் தோல்வி, இங்கிலாந்து அணி அயர்லாந்திடம் தோல்வி, பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயிடம் தோல்வி, தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி இவைகளால் ரசிகர்கள் மிகுந்த சோர்வடைந்தனர். உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக இதுவரை 12 அணிகள் முன்னேறி உள்ளன. 


அந்த அணிகளின் பட்டியல் : போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 12 சுற்றில் இரு குரூப்பிலும் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அதன் படி, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிகா, நெதர்லாந்து அத்துடன் ஐசிசி தரவரிசை அடிப்படையில் இரண்டு அணிகள் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 

இன்று கடைசி 20 ஓவர் போட்டி!! தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?
இதையடுத்து, ஆப்பிரிக்க தகுதி சுற்றில் 2 அணிகள், அமெரிக்க தகுதி சுற்றில் 1 அணி, ஆசிய தகுதி சுற்றில் 2 அணிகள், கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதி சுற்றில் 1 அணி, ஐரோப்பிய தகுதி சுற்றில் 2 அணிகள் என மொத்தம் 8 அணிகளும் இதில் விளையாட உள்ளன. அதன்படி 2024  டி20 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள அணிகள்:- ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web