2026 இலக்கிய நோபல் பரிசு கனடா எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு! செவ்வியல் மரபில் புதுமை

 
இலக்கியம்

 

2026-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு கனடாவைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான ஆன் கார்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுசெவ்வியல் மரபுடன் விளையாட்டுத்தனமான உரையாடல் மூலம் சமகால இலக்கியத்திற்கு புதிய வடிவங்களை உருவாக்கிய துணிச்சலான மற்றும் புதுமையான படைப்புகளுக்காக ஆன் கார்சனுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.

Who is Anne Carson, the Canadian author who won the 2026 Nobel Prize in Literature? - The Economic Times

1950-ம் ஆண்டு கனடாவின் டொராண்டோவில் பிறந்த ஆன் கார்சன், கவிதை, கட்டுரை, உரைநடை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களில் தனித்துவமான பங்களிப்பை செய்துள்ளார். குறிப்பாக பண்டைய கிரேக்க இலக்கியம் மற்றும் செவ்வியல் மரபுகள் அவரது படைப்புகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

‘Autobiography of Red’, ‘The Beauty of the Husband’, ‘Nox’, ‘Wrong Norma’ உள்ளிட்டவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். பண்டைய கிரேக்க இலக்கியங்களை நவீன மொழிநடை மற்றும் புதிய இலக்கிய வடிவங்களுடன் இணைக்கும் அவரது அணுகுமுறை, அவரை சமகால இலக்கியத்தில் தனித்துவமான எழுத்தாளராக உருவாக்கியுள்ளது.

Nobel Prize in Literature goes to Canadian author Anne Carson - The Hindu

ஆன் கார்சனின் படைப்புகள் கவிதை மற்றும் உரைநடை என வழக்கமான எல்லைகளுக்குள் மட்டும் நிற்காமல், மொழிபெயர்ப்பு, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களுடனும் உரையாடுகின்றன. குறிப்பாக செவ்வியல் இலக்கியத்தின் மொழி மற்றும் கருத்துகளை புதிய கோணத்தில் அணுகுவது அவரது எழுத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

76 வயதான ஆன் கார்சன், 2026-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசை வென்றுள்ளார். கடந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னஹோர்காய்க்கு வழங்கப்பட்டது.இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பரிசுத் தொகை 12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனா ஆகும்.