விருதுநகர் விபத்தில் 21 பேர் பலி - விஜய் உருக்கமான இரங்கல்... 'தவெக' ஆட்சி அமைந்தால் அதிரடி மாற்றம் - வாக்குறுதி!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காகத் திருச்சி மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தவெக தலைவர் விஜய், விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து குறித்துத் தனது ஆழ்ந்த வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
தற்போது பலி எண்ணிக்கை 20-ஐத் தாண்டியுள்ள நிலையில், விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், "விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் இருக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மனம் வருந்துகிறது. இந்தச் செய்தி மிகவும் மன வேதனையைத் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்," எனத் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே, கட்டனார்பட்டியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 19, 2026
விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள்…
தற்போது மீட்புப் பணிகள் நடந்து வரும் சூழலில், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்வதாகத் தெரிவித்துள்ள அவர், ஒரு முக்கிய அரசியல் வாக்குறுதியையும் இணைத்துள்ளார்:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், பட்டாசுத் தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் காக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

இன்று காலை திருச்சியில் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தும், ரோடு ஷோவில் 'விசில்' ஊதியும் வாக்கு சேகரித்த விஜய், இவ்வளவு பிஸியான நேரத்திலும் இந்தத் துயரச் சம்பவத்திற்காகத் தனது பரப்புரையின் இடையே இரங்கல் தெரிவித்தது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
