மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்... 50 நாட்கள் பராமரிப்புப் பணி!

 
BREAKING!மேட்டூர் அனல் மின்நிலையத்தில் பயங்கர தீவிபத்து!

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள 4-வது அலகில் ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் சுமார் 50 நாட்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 4-வது அலகில் வழக்கமான ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த அலகின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 210 மெகாவாட் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையம்

4-வது அலகில் நடைபெறும் இந்தப் பராமரிப்புப் பணிகள் சுமார் 50 நாட்கள் நீடிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பராமரிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், 4-வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.