சென்னையில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள 215 நிவாரண முகாம்கள் தயார்!

 
சென்னை

 

சென்னையில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாநகராட்சி சார்பில் 215 வெள்ள நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மழை

மேலும், பாதுகாப்புப் பணிகளுக்காக 275 படகுகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்க 111 சமையல் கூடங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

மழை கனமழை மும்பை

மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.