ஹார்முஸ் நீரிணை மூடல் - ஈரானுக்கு எதிராக 22 நாடுகள் போர்க்கொடி!

 
ஹார்முஸ்  கப்பல் ஹார்முஸ்  கப்பல்

வளைகுடா பிராந்தியத்தில் போர் 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணைவிவகாரத்தில் ஈரானுக்கு எதிராக 22 நாடுகள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. 

ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட 22 நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய்/எரிவாயு ஆலைகள் மீதான ஈரானின் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து என்பது சர்வதேசச் சட்டப்படி உறுதி செய்யப்பட வேண்டும். ஜலசந்தியைத் தடுக்கும் அச்சுறுத்தல்கள், கடலில் கண்ணிவெடிகளைப் புதைத்தல் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2817-க்கு ஈரான் இணங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஹார்முஸ்

அமெரிக்கா தனது வெற்றியை அறிவிக்கத் தயாரான வேளையில், ஈரான் தனது நீண்ட தூர ஏவுகணைகளை ஏவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்கா-இங்கிலாந்து கூட்டுப் படைத்தளமான டியாகோ கார்சியா மீது ஈரான் நேற்று 2 ஏவுகணைகளை வீசியது. 4,000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த 'கொரம்சாகர்-4' ஏவுகணைகள், அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

உச்ச தலைவர் காமேனி உள்ளிட்ட பல தலைவர்களை இழந்த போதிலும், ஈரான் தனது கடற்படை மற்றும் ஏவுகணை வலிமையைப் பயன்படுத்திப் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானின் வான்வழி மற்றும் கடற்படைகளை நிர்மூலமாக்கிவிட்டதாக அதிபர் டிரம்ப் கூறினாலும், டியாகோ கார்சியா மீதான தாக்குதல் அமெரிக்காவின் பாதுகாப்பு வியூகத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

கப்பல் கச்சா எண்ணெய் ஈரான்

ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட 22 நாடுகள் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.