22 கோடியில் ஆடம்பர பங்களா! புது வீட்டுக்கு குடி புகுந்த பிரபல நட்சத்திர ஜோடி!

 
ரன்வீர் தீபிகா

நட்சத்திர ஜோடி, ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்ட புது வீட்டிற்கு மிக எளிமையாக கிரஹ பிரவேச விழா நடத்தி குடி புகுந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  நடிகர் ரன்வீர் சிங் பாலிவுட்டின் அசைக்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவராக எப்போதும் பிசியாக நடித்துக் கொண்டு இருப்பவர். திரைப்படம் மட்டுமல்லாது விளம்பரப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். 

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘பேண்ட் சர்மா பாராத்’ என்ற படத்தில் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் ஜோடி போட்டு நடித்து முதன் முதலாக அறிமுகமானார். பெரிய அளவு ஹிட் கொடுத்த இந்த படத்தின் மூலம் இந்தி திரையுலகின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்தார். தனது அறிமுகப் படத்திலேயே ரன்வீர்சிங்குக்கு அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. ரன்வீர் சிங் - நடிகை தீபிகா படுகோன் காதல் கடந்த 2018-ம் ஆண்டு திருமணத்தில் கைகூடியது.

ரன்வீர் தீபிகா

இந்த நிலையில், பிரபல பாலிவுட் தம்பதிகளான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் ஜோடி, மும்பை அருகே உள்ள கடற்கரை நகரமான அலிபாக்கில் ஆடம்பரமான பங்களா ஒன்றை வாங்கியுள்ளனர். கிம் பீச் அருகே வாங்கப்பட்டுள்ள பங்களா, 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. ரூ.22 கோடிக்கு இந்தப் பங்களாவை இந்த ஜோடி வாங்கியுள்ளது.

இந்த வீட்டின் கிரஹப்பிரவேசம், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நடந்தது. இதில் நடிகர் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை ரன்வீர் சிங், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

கிரக பிரவேசம் கிரஹ புதுமனை புகுவிழா

அதில் தங்களின் முகத்தைக் காண்பிக்காமல் பூஜை செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த ஜோடி, மும்பை பாந்த்ராவில், ரூ.119 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில், சமீபத்தில் வீடு வாங்கியிருந்தது. 16, 17, 18 மற்றும் 19வது மாடிகளை இணைத்து, இந்த வீடு கட்டப்படுவதாகவும், இதன் மொத்த பரப்பளவு 11,266 சதுர அடி என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web