7300 இடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டா போட்டி!! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடக்கம்!!

 
டிஎன்பிஎஸ்சி

கடந்த  2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக  தமிழகத்தில்  போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. நடப்பாண்டில் அனைத்து அரசு முறை தேர்வுகள், போட்டித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.  தமிழகம் முழுவதும் இன்று 22 லட்சத்துக்கும் அதிகமானப்வர்கள் குரூப் 4 தேர்வுகளை எழுத இருக்கின்றனர். இந்நிலையில், குரூப்4   தேர்வுக்கான  வழிகாட்டு  நெறிமுறைகளை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு எல்லாம் தேர்வு எழுத இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி, நேர்காணல்களை செய்து ஆட்சேர்ப்பு செய்யும் பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகின்றது.  அதில் தமிழகத்தில்  காலியாக  உள்ள 7,301 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 9,35,354 ஆண்கள், 12,67,457 பெண்கள், 131 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 22 லட்சத்து 02 ஆயிரத்து 942 பேர் எழுத உள்ளனர்.

 

இதற்காக  தமிழகம் முழுவதும் 7,689 மையங்கள்  தயார்படுத்தப்படுள்ளது. இந்த  தேர்வை கண்காணிக்க 1,10,150 தேர்வறை கண்காணிப்பாளர்களும், 7,689 கண்காணிப்பு அலுவலர்களும்  1,932 நடமாடும் கண்காணிப்பு படைகள், 534 பறக்கும் படையினர்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இன்று நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாயணையம் வெளியிட்டுள்ளது. அதில்,

காலை 8.30 மணிக்குள் தேர்வு எழுத இருப்பவர்கள், தேர்வு மையத்துக்குள் சென்று விட வேண்டும்; 9 மணிக்கு OMR தாள்கள் வழங்கப்படும் என்றும், 12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் யாரும், தேர்வறையை விட்டு வெளியேறக் கூடாது,  

முகக்கவசம் கட்டாயம், OMR தாளில் கருப்பு பால் பாய்ண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும், பதிவு எண்ணை கட்டாயமாக குறிப்பிட வேண்டும், OMR தாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களை தேர்வர்கள் விடைகளாக குறிக்கக்கூடாது  மேலும்,  விடைதெரியாத கேள்விக்கு OMR தாளில் உள்ள E என்கிற கட்டத்தில் குறிக்க வேண்டும், ஹால் டிக்கெட், புகைப்படம், பேனா தவிர வேறு எதையும் எடுத்துவரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web