கனமழையால் 22 பேர் பலி!! பலர் மாயம்!! வடமாநிலங்களில் தொடரும் சோகம்!!

 
வெள்ளம்

இந்தியாவில் வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரகாண்ட்  மாநிலங்களில் கனமழை பெய்து, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால்  நேற்றுவரை 31 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.இமாச்சல பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 22 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரிவு

மேலும் கனமழை  காரணமாக 10 பேர் காயமடைந்துள்ளனர். மாண்டி மாவட்டத்தில் காணாமல் போன 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரகாண்டில் ஏற்பட்டுள்ள தொடர் மேக வெடிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 10 பேர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுகள் நிரம்பி வழிகின்றன. அவைகள்  அபாய கொள்ளளவை தாண்டியுள்ளன. பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சரிவு
ஒடிசாவை பொறுத்தவரை  500 கிராமங்களில் சுமார் 4 லட்சம் மக்கள் வெள்ள அபாயத்தில் சிக்கியுள்ளனர். 4 பேர் கனமழையால் உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்டின் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலமும் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல் கனமழை இன்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்திலும், நாளை கிழக்கு ராஜஸ்தானிலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web