10வது பாஸானவர்களுக்கு ரயில்வேயில் 22,195 காலி பணியிடங்கள்... கடைசி தேதி மார்ச் 9 வரை நீட்டிப்பு!

 
ரயில்வே துறை வேலை வாய்ப்பு ரயில்

ரயில்வே காலியிடங்களுக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
இந்திய ரயில்வே வாரியம் (RRB), நாடு முழுவதும் உள்ள பல்வேறு மண்டலங்களில் காலியாக உள்ள 22,195 'லெவல் 1' (குரூப் டி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை (CEN 09/2025) வெளியிட்டிருந்தது. 
ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 2 வரை இருந்த நிலையில், தற்போது கடைசி தேதி மார் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தைக் கட்டணத்தைச் செலுத்த மார்ச் 11 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது 

இந்திய ரயில்வே பணியிடம்

விண்ணப்பக் கட்டண விபரங்கள்
பொது / ஓபிசி பிரிவினர்: ₹500 (தேர்வு எழுதிய பின் ₹400 வங்கிச் சேவை கட்டணம் போகத் திரும்ப வழங்கப்படும்).

எஸ்சி / எஸ்டி / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / சிறுபான்மையினர்: ₹250 (தேர்வு எழுதிய பின் முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும்).

கட்டண முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே (Debit/Credit Card, Net Banking, UPI) செலுத்த முடியும்.

ரயில் தண்டவாளம் ரயில்வே பராமரிப்பு

Track Maintainer Grade-IV (தண்டவாளப் பராமரிப்பாளர்), Pointsman (பாயிண்ட்ஸ்மேன்), Helper/Assistant (மின்சாரம், இயந்திரவியல் மற்றும் சிக்னல் துறைகளில் உதவியாளர்) என 22,195 காலியிடங்களில் முக்கியப் பொறுப்புகள் அடங்கும்:

விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு செய்திருந்தால், அதைத் திருத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 12 முதல் மார்ச் 21ம் தேதி வரை வழங்கப்படும். இதற்குத் தனியாகத் திருத்தக் கட்டணம் (Modification Fee) செலுத்த வேண்டியிருக்கும்.

கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ (ITI) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 33 ஆண்டுகள் (இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயதுத் தளர்வு உண்டு).

அதிகாரப்பூர்வ இணையதளம்: rrbapply.gov.in