23,64,027 பேர் 100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து நீக்கம்... மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

 
100


இந்தியா முழுவதும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் 100 நாள் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டுக்கு  100 நாட்கள் மூலம் ஓரளவு கிராமத்து ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் வறுமையைப் போக்கி, அன்றாட வாழ்க்கையை அவலமாக்காமல் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இனி இவர்களுக்கு 100 நாள் வேலை இல்லை – புதிய கட்டுப்பாடுகள்

இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஆண்டுக்கு ஆண்டு குறைத்ததால் அதற்கென இருந்த வாய்ப்புகளும் மெல்ல மெல்ல மங்கி வருவதாக தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில்  மத்திய பட்ஜெட்டில் கூட 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து பல்வேறு காரணங்களால் 23,64,027 பயனாளிகளை மத்திய அரசு நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனி இவர்களுக்கு 100 நாள் வேலை இல்லை – புதிய கட்டுப்பாடுகள்

 அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 6,19,310 பயனாளிகள் நீக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக பீகார் - 4,56,004 பயனாளிகளும், சத்தீஸ்கரில் - 3,36,375 பயனாளிகளும் நீக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு  நாடாளுமன்றத்தில்  தெரிவித்துள்ளது.இதனால் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரமின்றி செய்வதறியாது திகைத்து நிற்கும் அவல நிலை உருவாகியுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.