டெல்லியில் 23,000 போலீசார் பாதுகாப்பு... போராட்டம் எதிரொலியால் இன்றிரவு 10 மணி வரை இன்டர்நெட் சேவை துண்டிப்பு!

 
இன்டர்நெட் சேவை இணையதள

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக தலைநகரின் சில பகுதிகளில் இன்டர்நெட் சேவை தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு முன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் காயமடைந்ததை அடுத்து, இந்த முறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

டெல்லி தடியடி

ஜந்தர் மந்தர் பகுதியில் 23,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன், ஜன்பத் - கர்தவயா பாதை சந்திப்பை மையமாகக் கொண்டு 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இன்று இரவு 10 மணி வரை இன்டர்நெட் சேவை தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.