234 தொகுதிகளிலும் தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

 
விஜய் தவெக மாநாடு

 தவெக

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்  2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்க இருப்பதால்  கட்சியில் புதிய உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் கட்சியை பலப்படுத்துதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து நடிகர் விஜய் நேர்முகத்தேர்வு  நடத்தி மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார். அத்துடன் அவர்களுக்கு வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கினார்

தவெக

 அடுத்து  2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட இருக்கும் நிலையில் புதிதாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அரசு பேருந்து ஓட்டுநர் தொழிற்சங்கம் அமைய உள்ளது.இதற்காக நேற்று புஸ்ஸி ஆனந்த்  பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

 இந்நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி மற்றும் நிர்வாகிகளை நியமிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி வாரியாக 5 முதல் 7 பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது ஒவ்வொரு பூத்திருக்கும் ஒரு நிர்வாகியை நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web