24 மாணவர்கள் வாந்தி, மயக்கம்!! பிறந்த நாள் சாக்லேட் சாப்பிட்டதால் விபரீதம்!!

 
பிறந்தநாள் சாக்லேட்

ராணிப்பேட்டை மாவட்டத்தில்  சயனபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்தப் பள்ளியில்  மொத்தம் 163 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 4ம் வகுப்பு மாணவனுக்கு இன்று பிறந்தநாள். தன்னுடன் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சாக்லேட் கொடுக்கும் வகையில் சாக்லேட் கொண்டு வந்தான். அருகில் இருக்கும் கடையில் வாங்கிய சாக்லேட்டுக்களை சக மாணவர்களுக்கு கொடுத்தான். இந்த சாக்லேட்டை சாப்பிட்ட 24 மாணவர்களுக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டது. ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழத் தொடங்கினர். 

பிறந்தநாள் சாக்லேட்


பள்ளி வளாகமே பரபரப்படைந்தது. உடனடியாக ஆசிரியர்கள் புன்னையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். பள்ளிக்கே சிறிது நேரத்தில் நேரில் வந்த மருத்துவ குழுவினர்  மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அத்துடன் காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்களும் நேரில்  பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதன் பிறகு மாணவன் கொடுத்த சாக்லேட் பாக்கெட்டை ஆய்வு செய்தனர்.  அந்த சாக்லேட் பாக்கெட்டில் காலாவதியான தேதி குறிப்பிடப்பட்டிருந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.

பிறந்தநாள் சாக்லேட்

காலாவதியான சாக்லேட்டை விற்பனை செய்த  கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து திவீர  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வாங்கிய சாக்லேட் காலாவதியானதும், அதனால் பள்ளி மாணவர்கள் வாந்தி, மயக்கமடைந்தது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களின் பெற்றோர் கதறி துடித்தபடி வந்து தங்கள் பிள்ளைகளை வாரி அணைத்து கொண்டது காண்பவர்களை கரைந்துருகச் செய்தது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web