பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - 4 ராணுவ வீரர்கள் பலி!
Nov 15, 2026, 19:45 IST
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தீவிர மோதல்களில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 8 பயங்கரவாதிகளும், கைபர் பக்துங்வா மாகாணத்திற்கு உட்பட்ட வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் நடைபெற்ற மோதலில் 16 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கையின் போது, ஒரு உயர் அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான நவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
