காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலால் 24 வயது இளைஞர் உயிரிழப்பு!

 
டெங்கு

தமிழகத்தில் பருவமழை காலம் தொடங்கியுள்ள சூழலில், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (24). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

டெங்கு

உயிரிழந்த இளைஞருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாகவும் விரைவாகவும் சிகிச்சை அளிக்கப்படாததே அவரது இறப்புக்குக் முக்கியக் காரணம் என்று கூறி உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

டெங்கு

பருவமழை தீவிரமடைந்து வரும் காலகட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்கச் சுகாதாரத்துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், முறையான மருத்துவ சிகிச்சைகளையும் உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.