கல்யாணமாகி 6 மாசம் தான் ஆச்சு... 25 வயது கணவர் பூங்காவில் மாரடைப்பால் பலி... மனைவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

 
அபிஷேக்

சமீபகாலமாக இளவயது மரணங்கள் அதிகரித்து வருகின்றன. நடனம் ஆடும் போது மரணம், உடற்பயிற்சியின் போது மரணம், மணமேடையில் மரணம், பள்ளி மாணவன் மயங்கி சரிந்து பலி என உயிரிழப்புக்கள் தொடர்கின்றன. மாறி வரும் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம், கொரோனாவின் தாக்கம் என ஏதோதோ காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.   அந்த வரிசையில் டெல்லி உயிரியல் பூங்காவில் 25 வயது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
நவம்பவர் 30, 2023ல் தான் அபிஷேக் மற்றும் அஞ்சலி திருமணம் நடைபெற்றது . திங்கட்கிழமை, இருவரும் டெல்லி உயிரியல் பூங்காவிற்குச் சென்றனர். பூங்காவில்  25 வயதான அபிஷேக் அலுவாலி மாரடைப்பால் இறந்தார், அவரது மனைவி அஞ்சலி, அதிர்ச்சி தாங்க முடியாமல் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பூங்காவில்   அபிஷேக்கிற்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே  உதவிக்காக அஞ்சலி தனது நண்பர்களை அழைத்தார். அத்துடன் அபிஷேக்  அருகில் உள்ள  குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலுதவிக்கு பிறகு   சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மாரடைப்பு
பின்னர் அபிஷேக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக   மருத்துவர்கள் தெரிவித்தனர்.  அவரது உடல் காஜியாபாத்தின் வைஷாலியில் உள்ள அல்கான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள புதுமணத் தம்பதிகளின் வீட்டிற்கு இரவு 9 மணிக்கு கொண்டு வரப்பட்டது.  அதிர்ச்சியை தாங்க முடியாமல், அஞ்சலி அவர்களின் 7 வது மாடி பால்கனியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். உறவினர்கள் அவரை படுகாயங்களுடன் மீட்டு   வைஷாலி மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  சிகிச்சை பலனின்றி  இன்று அதிகாலையில் அவர் உயிர் பிரிந்தது.

குதித்து தற்கொலை


அபிஷேக்கின் உறவினர்  இது குறித்து  " அபிஷேக் உடலை வீட்டிற்கு கொண்டு வந்ததும், அருகிலேயே அமர்ந்து அழுது கொண்டே  இருந்தாள். திடீரென எழுந்து பால்கனியை நோக்கி ஓடினாள். அவள் குதிக்கப் போகிறாள் என நினைத்து பின்னாலேயே ஓடினேன். நான் பிடிக்கும் முன்பே   அவள் குதித்திருந்தாள்."
அபிஷேக் உறவினர் சஞ்சீவ் “அபிஷேக் முதலில் மிருகக்காட்சி சாலையில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். "அபிஷேக்கின் நண்பர்கள்  அவரை சப்தர்ஜங்கிற்கு  கொண்டு செல்கிறோம் எனக் கூறினர். உடனே மருத்துவமனைக்கு ஓடினேன்.  மருத்துவர்கள் என்ன முயற்சித்தும்   அவரைக் காப்பாற்ற முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.   

From around the web