26 புறநகர் ரயில் சேவைகள் ரத்து!! பயணிகள் கடும் அவதி!!

 
ரயில்

சென்னையின் புறநகரில் வசித்து வருபவர்கள் அன்றாட தேவை, பணிகளுக்காக சென்னை வந்து செல்ல பெரும்பாலும் புறநகர் ரயில் சேவையையே நம்பியிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ரயில் சேவை நேர அட்டவணை மறு பரிசீலணை செய்யப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில் தற்போது அறிவிக்கப்பட்ட புதிய அட்டவணைப்படி 26 புறநகர் ரயில்களின்  சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ரயில்

 ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளில் திருவள்ளூர் முதல் ஆவடி வரை செல்லும் 8 ரயில்கள்,  தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை செல்லும் 9 ரயில்கள் , பறக்கும் ரயில் தடத்தில் செல்லும் 9ரயில்கள் என மொத்தமாக 26 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
 இதன் காரணமாக வேலை முடிந்து வில்லிவாக்கம் ,அம்பத்தூர் , திருவள்ளூருக்கு திரும்பி செல்லும் பயணிகள்,  சென்னை கடற்கரை - அரக்கோணம் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  

கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

இதுகுறித்து  துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்ட போது ரயில்வே அதிகாரிகள் ,  இரவு நேரங்களில் ரயில் தண்டவாள சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட வழித்தடங்களில்  ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு இருப்பது தவிர்க்க முடியாதது.  இந்த நிலைமை விரைவில் சீரடைந்து  ஒரு சில மாதங்களில் ரயில்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும் என  தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!