தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் பலி; 26 பேர் படுகாயம்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மொத்தம் 27 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேளிக்கை விடுதி மற்றும் கடைக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரிலுள்ள ஒரு கேளிக்கை விடுதிக்குள் புகுந்தும், கேப் டவுன் நகரிலுள்ள ஒரு கடைக்குள் புகுந்தும் ஆயுதம் ஏந்திய மர்மக் கும்பல்கள் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தின.
இந்த இருவேறு கொடூரத் தாக்குதல்களிலும் சம்பவ இடத்திலேயே 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 26 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பாவி பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய மர்மக் கும்பலைச் சேர்ந்தவர்களைத் தென் ஆப்பிரிக்கக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
