29 டன் ஸ்டீல் காயில் திருட்டு!! பாஜக பிரமுகர் உட்பட மர்மகும்பலை சுற்றி வளைத்த காவல்துறை!!

 
ஸ்டீல் காயில்

கர்நாடகாவில் இருந்து, 29 டன் ஸ்டீல் காயில்களுடன் ஏற்றிக்கொண்டு சென்னை மணலி பகுதிக்கு, லாரி ஒன்று வந்தது. அந்த லாரியில் இருந்த ஜிபிஆர்எஸ் கருவி வேலை செய்யவில்லை. இதனால், லோடு ஏற்றிவந்த லாரி எங்கு உள்ளது என்று தெரியாமல், அதன் உரிமையாளர் ரவி குமார் என்பவர், மணலி போலீசாருக்கு புகார் அளித்தார்.

போலீஸ்

புகாரின் பேரில் மணலி போலீசார் நடத்திய விசாரணையில், லாரியின் ஜிபிஆர்எஸ் கருவி காட்டூர் பகுதி வரை செயல்பட்டு, அதன் பின் செயலிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை வைத்து, லாரியை கண்டுபிடித்தனர். அங்குள்ள ஒரு குடோனில் லாரியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதில் இருந்த ஸ்டீல் காயில்களை, ரூ. 12 லட்சத்திற்கு விலை பேசி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, திருவேற்காடு, தேவி நகரைச் சேர்ந்த பாஜகவின் திருவள்ளூர் மேற்கு மாநில செயற்குழு உறுப்பினர் பாரதிராஜா (43), செங்குன்றம் பாடிய நல்லுாரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (36), புது நகரைச் சேர்ந்த மணிகண்டன் (37), எம்.ஏ.நகரைச் சேர்ந்த சந்தோஷ் (34) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது

விசாரணையில், லாரி டிரைவர் செல்வம் வாயிலாக, பாரதிராஜா லாரியை கடத்தி, ஸ்டீல் காயில்களை திருடி, விற்றது தெரியவந்தது. தலைமறைவாக இருக்கும் லாரி ஓட்டுநர் செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web