மாடி படிக்கட்டு இடிந்து விழுந்து 2 கல்லூரி மாணவர்கள் பலி!! மழைக்கு ஒதுங்கிய போது சோகம்!

 
மாடி படிக்கட்டு

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், தென்னேரி பகுதியில் வசித்து வருபவர்   பிரென்ச் ஜெஃப்ரி தவமணி. இவர்   மீனம்பாக்கம்  திமோ மில்கி ,   பூந்தமல்லி    அஸ்வின்,   சிட்லபாக்கம்   சாய் கௌசிகன்  4  பேரும் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தனர்.இவர்கள்   நேற்று மாலை கல்லூரி முடிந்து   3 பைக்குகளில் மொத்தம் 6 பேர்  வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.  சேலையூர் காவல் நிலையம் எதிரே உள்ள ஏரிக்கரை தெருவிற்கு வந்த போது  திடீர்  மழை பெய்தது.  

மாடி படிக்கட்டு

அதனால் அவர்கள், அருகே இருந்த பழைய கட்டிடத்தின் படிக்கட்டுக்கு கீழே சென்று  ஒதுங்கினர். அப்போது திடீரென படிக்கட்டு சரிந்து மாணவர்கள் தலையில்  மேல் விழுந்தது. இதில் பிரென்ச் ஜெஃப்ரி தவமணி, திமோ மில்கி, அஸ்வின், சாய் கௌசிகன்   மூவரும்  இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.உடன் வந்த மற்ற மாணவர்கள்  அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களை உதவிக்கு அழைத்தனர்.  உடனடியாக  பொதுமக்கள் பொக்லைன் இயந்திரம் கொண்டு வந்து,  இடிபாடுகளை அகற்றி   சிக்கிய 4  பேரையும் வெளியே மீட்டனர். அதற்குள் தாம்பரம் தீயணைப்பு படையினர் மற்றும் சேலையூர் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.   

ஆம்புலன்ஸ்
மீட்கப்பட்டவர்கள் உடனடியாக  ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியிலேயே  பிரென்ச் ஜெஃப்ரி தவமணி, திமோ மில்கி  உயிரிழந்தனர். அஸ்வின், சாய் கௌசிகன் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம்  குறித்து    வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   பிரென்ச் ஜெஃப்ரி தவமணி, திமோ மில்கி ஆகியோரின் உடல்கள்  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மழைக்கு ஒதுங்கிய மாணவர்கள்  மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web