2வது டி20 : இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதல் !

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து 214 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. சுப்மன் கில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற இலங்கை அணி கடுமையாக போராடும் என்கின்றனர் இலங்கையினர். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இன்றைய ஆட்டம் இன்று ஜூலை 28ம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.