கோவையில் கள்ள நோட்டு அச்சடித்த 3 பேர் கைது - போலீசார் சோதனையில் அதிர்ச்சி!

 
கள்ள நோட்டு கள்ள நோட்டு

கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் கள்ள நோட்டுகள் அச்சிடப்படுவதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது கள்ள நோட்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த 3 பேரைப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

அதிர்ச்சி!! ரூ.25 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்!! 6 பேர் கைது!

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சதாம் உசேன், பைசல் மற்றும் பாரூக் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் ரகசியமாக மறைத்து வைத்திருந்த 36,800 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ள நோட்டுகளை அச்சிடுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.

கள்ள நோட்டுகள்

இந்தக் கும்பலுக்குக் கள்ள நோட்டுகளை அச்சிட அச்சு இயந்திரம் வாங்கி கொடுத்ததாகக் காஜா மொய்தீன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் தற்பொழுது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் அச்சு இயந்திரம் மூலம் கள்ள நோட்டுகள் அச்சிடப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.