நடிகையை நிர்வாணமாக படம் பிடிக்க முயன்ற தயாரிப்பாளர் உட்பட 3 பேர் கைது!

 
நிர்வாணம் நிர்வாணமாக

 

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த துணை நடிகை ஒருவருக்குச் சினிமா படத்தில் கதாநாயகி வாய்ப்பு தருவதாகக் கூறி, தங்கும் விடுதிக்கு வரவழைத்து நிர்வாணமாகப் புகைப்படம் எடுக்க வற்புறுத்திய தயாரிப்பாளர் மற்றும் இரண்டு பெண்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளம்பெண் ஒருவர் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் துணை நடிகையாகப் பணியாற்றி வருகிறார். இவரைப் பெருங்குடி பகுதியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் நந்தி ராமநாதன் (65) என்பவர் சமீபத்தில் தொடர்பு கொண்டுள்ளார். தான் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க வைக்க விரும்புவதாகவும், அதற்கான போட்டோஷூட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறி பெருங்குடி காவேரி தெருவில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு வரவழைத்துள்ளார்.

க்ஃப்க்

இதனை நம்பி அந்த விடுதி அறைக்கு நடிகை சென்றுள்ளார். அங்குத் தயாரிப்பாளர் நந்தி ராமநாதனுடன் தரமணி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் மற்றும் ஒரு 7 வயது சிறுமியும் இருந்துள்ளனர். அங்கிருந்த பெண்கள் முதலில் நடிகையைக் கவர்ச்சியான தோற்றங்களில் தங்களது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அதன் பின்னர், "இந்தப் படத்தில் நீங்கள் சாமி வேடத்தில் நடிக்க வேண்டி உள்ளது. எனவே, உடம்பில் எங்கும் காயத் தழும்புகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். முகத்தை மட்டும் மறைத்துக் கொண்டு நிர்வாண கோலத்தில் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்" என்று வற்புறுத்தியுள்ளனர்.

தயாரிப்பாளர் மற்றும் அங்குள்ள பெண்களின் இந்த அத்துமீறிய பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகை, அவர்களுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு உடனடியாக அந்த விடுதி அறையை விட்டு வெளியேறினார். பின்னர், இது குறித்துத் தனது செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டறைக்கு (100) அவசரத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்தவுடன் 'சிங்கப்பெண்' அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார், குறிப்பிட்ட அந்த விடுதி அறைக்கு விரைந்து சென்றனர்.

சிங்கப்பெண்

அங்கு நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற தயாரிப்பாளர் நந்தி ராமநாதன் மற்றும் அவருக்குத் துணையாக இருந்த 2 பெண்கள் ஆகிய 3 பேரையும் போலீசார் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் பாலியல் தொந்தரவு, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த விடுதி அறையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 வயது சிறுமியை மீட்ட போலீசார், அச்சிறுமியை அடையாறில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு தருவதாகக் கூறி, தங்கும் விடுதி அறையில் வைத்து நடிகையை நிர்வாணப் படம் எடுக்க முயன்ற இச்சம்பவம் சென்னை சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.