ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் பலி... விடுமுறை நாளில் சோகம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னசேலம் அருகே உள்ள பகுதியில் 11 வயதான இமானுவேல், 7 வயதான சாம் ஆபிரகாம் மற்றும் 13 வயதான ராஜா ஆகிய சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஏரியில் மீன்பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சிறுவர்கள் திடீரென காணாமல் போனதால் அவர்களது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஏரியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இரவு முழுவதும் நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு, மூன்று சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்த இமானுவேல், சாம் ஆபிரகாம் ஆகியோர் சகோதரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

ஒரே நேரத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
