ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களுக்கு மருத்துவ இடத்தில் வாய்ப்பு - நெசவாளர் குடும்பத்தில் சாதனை!
திருநெல்வேலி மாவட்டம் வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்த நெசவாளர் ராம்குமாரின் மகன்கள் அருண், தரண் மற்றும் வெங்கட் ஸ்ரீ ஆகிய 3 சகோதரர்களும் அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பிற்குத் தேர்வாகிப் சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் கீழ் இந்த 3 சகோதரர்களுக்கும் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன.

அருண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார். தரண் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார். வெங்கட் ஸ்ரீ நாகர்கோவில் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.
எளிய நெசவாளர் குடும்பப் பின்னணியில் இருந்து அரசுப் பள்ளியில் மட்டுமே பயின்று, ஒரே ஆண்டில் 3 மகன்களும் மருத்துவப் படிப்பிற்குத் தேர்வாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெசவாளர் ராம்குமாரின் குடும்பத்தினருக்கும், சாதனை படைத்த சகோதரர்கள் மூவருக்கும் சமூக வலைத்தளங்களிலும் நேரில் பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
