நிலக்கண்ணி வெடித்து 3 குழந்தைகள் உடல் கருகி பலி... 4 பேர் கவலைக்கிடம்... ஏமனில் பரபரப்பு!

 
நிலக்கண்ணி

2014ம் ஆண்டு முதல் ஏமன் நாட்டில்  உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஏமன் நாட்டை பொறுத்தவரை , சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாட்சி நடைபெற்று  வருகிறது. இதற்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து  வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.   ஏமன் அரசுக்கு ஆதரவாக, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகள் செயல்பட்டு வருகின்றன.
ஏமன் நாட்டில்  தெற்கு பகுதியில் லாஜ் மாகாணத்தில் புலம்பெயர்ந்த அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நிலக்கண்ணி

இந்த முகாம்களில்  போரால் பாதிக்கப்பட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.    அந்த பகுதியில் திடீரென நிலக்கண்ணி வெடி ஒன்று வெடித்து. இந்த வெடி விபத்தில்   3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.   4 பேர் படுகாயம் அடைந்தனர்.கூடாரங்களுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சின்னஞ்சிறு  குழந்தைகள் தெரியாமல் நிலக்கண்ணி வெடியை  மிதித்து விட பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளதாக  அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  

நிலக்கண்ணி
2018  முதல் சவுதி அரேபியா தலைமையில் மசாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.   ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல்வேறு மாகாணங்களில்வைத்த 4.31 லட்சம் நிலக்கண்ணி வெடிகள் இதுவரை அகற்றப்பட்டு உள்ளன. மேலும்  3 முதல் 9 வரையிலான தேதிகளில் 784 நிலக்கண்ணிகள் நீக்கப்பட்டு உள்ளன.  இதனால் மக்களில் பலர் உயிரிழந்தும் பாதிக்கப்பட்டும் உள்ளனர். பொதுமக்களுக்கான நல உதவிகள் சென்று சேர்வதும் தடுக்கப்பட்டுள்ளதாக  வேதனை தெரிவித்துள்ளனர். கண்ணிவெடிகளை கண்டறிந்து அதனை நீக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web