சேலத்தில் மின்னல் தாக்கி 3 பசு மாடுகள் உயிரிழப்பு!

 
பசு மாடு  மின்னல்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு கிராமத்தில், பெய்து வரும் கனமழையின் போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் மூன்று பசு மாடுகள் உயிரிழந்தன.

மூலக்காடு கிராமத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மாடுகள் மீது திடீரென மின்னல் தாக்கியது. இந்த துயர சம்பவத்தில் விவசாயி சின்னசாமி என்பவருக்குச் சொந்தமான ஒரு பசு மாடும், லதா என்பவருக்குச் சொந்தமான இரண்டு பசு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. 

மின்னல்

தங்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கிய கால்நடைகளை இழந்து தவிக்கும் உரிமையாளர்கள், இச்சம்பவத்தைக் கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.