பழனியில் 3 நாட்கள் கட்டணமில்லா தரிசனம், இலவச பேருந்து, 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்!

 
பழனி


முருகனின் அறுபடை வீடுகளில் திண்டுக்கல் மாவட்டம் பழனி உலகப் பிரசித்தி பெற்றது.  பிப்ரவரி 11ம் தேதி தைப்பூச திருவிழா அனைத்து முருகன் ஆலயங்களிலும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி 3 நாள்களுக்கு கட்டணமில்லா தரிசனம் செய்யலாம் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

பழனி

தைப்பூச திருநாளில் முருகன் கோயில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக 3 நாட்கள் கட்டணமில்லா தரிசனம் செய்யலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சேகர்பாபு
அதன்படி பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம்.  பிப்ரவரி 10, 11, 12 என தொடர்ந்து 3 நாட்கள் பழனி கோயிலில் கட்டணமின்றி தரிசனம் செய்யலாம். திருவிழாவுக்கு வரும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக நகரில் கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web